138 ரன் டார்கெட் ; ஆபத்தான டிக்ளரை இதனால்தான் செய்தோம் – பாபர் ஆஸம் வித்தியாச காரணம்!

0
1447
Babar

சமீபத்தில் இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸ் தலைமையில் பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி அந்த தொடரை முழுமையாக கைப்பற்றி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது!

இதற்கடுத்து நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரில் விளையாட பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. ஐந்து நாட்களுக்கு முன்பு தொடங்கிய இந்த போட்டியில் முதலில் டாசில் வென்று பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது!

கேப்டன் பாபர் ஆஸமின் சதம், மீண்டும் அணிக்குள் வந்த முன்னாள் கேப்டன் சர்பராஸ் கான் அரை சதம் ஆகியவற்றால் பாகிஸ்தான் அணி 438 ரன்கள் சேர்த்தது. இதை அடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சனின் இரட்டை சதம் மற்றும் டாப் லாதமின் சதம் ஆகியவற்றால் முதல் இன்னிங்ஸில் 612 ரண்களை ஒன்பது விக்கெட் இழப்பிற்கு டிக்ளேர் செய்தது.

இதை அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி ஐந்தாவது நாளான இன்று ஒரு சரிவை சந்தித்து இமாம் உல் ஹக் மற்றும் சர்ப்ராஸ் கானின் அரை சதங்களால் மீண்டது. ஆட்டம் டிராவை நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது கேப்டன் பாபர் திடீரென்று 15 ஓவருக்கு 138 ரன்கள் எடுத்தால் வெல்லலாம் என்று நியூசிலாந்து அணிக்கு ஒரு வாய்ப்பை அளித்து அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் ஆட்டம் வெளிச்சம் இல்லாத காரணத்தால் முடித்துக் கொள்ளப்பட்டது. நியூசிலாந்து அணி 61 ரண்களை ஒரு விக்கெட் இழப்பிற்கு எடுத்து இருந்தது.

இந்த ஆபத்தான முடிவு குறித்து கேப்டன் பாபர் ஆஸம் கூறும் பொழுது “உங்களுக்கே தெரியும் நான் டாசின் போது சொல்லியது போல இந்த ஆட்டத்தில் முடிவை பெற விரும்பினேன். அதனால் நான் டிக்ளர் செய்தேன். ஆனால் வெளிச்சம் போதுமானதாக இல்லை அதனால் டிராவில் முடிந்தது. எங்களின் ஐந்தாவது பந்துவீச்சாளர் சல்மான் ஆகா தற்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவரை நாங்கள் தவறவிட்டோம். பந்துவீச்சு தாக்குதலுக்கு ஐந்து பந்துவீச்சாளர்கள் இருப்பது நல்லது என்று நினைக்கிறேன். வாசிம் மற்றும் சவுத் சாகில் இருவரும் போட்டியில் எங்களை மீட்டார்கள். பாசிட்டிவ் கிரிக்கெட் விளையாடியதற்கான பெருமை அவர்களையே சாரும். சவுத் சாகில் ஒரு முதிர்ச்சியான இன்னிங்ஸ் விளையாடினார் எதிர்காலத்திலும் அவரிடம் இப்படியான ஆட்டத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று கூறி முடித்தார்.