13 பேரை வழியனுப்பி, 20 கோடியை மிச்சப்படுத்திய மும்பை இந்தியன்ஸ்; யார் யார் வெளியே? – முழு லிஸ்ட்!

0
4893

மும்பை இந்தியன்ஸ் அணி 13 வீரர்களை வெளியேற்றி கிட்டத்தட்ட 20.55 கோடி ரூபாயை கையில் வைத்திருக்கிறது.

2023 ஆம் ஆண்டு ஐ பி எல் தொடருக்கான ஏலம் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் பங்கேற்பதற்கு முன்னர் ஒவ்வொரு அணியும் தங்களது அணியின் வீரர்களில் யாரை தக்க வைக்க வேண்டும்? யாரை வெளியேற்ற வேண்டும்? என முடிவு செய்து அதற்கான இறுதிப் பட்டியலை நவம்பர் 15ஆம் தேதி மாலை கொல் ஐபிஎல் நிர்வாகத்திலும் சமர்ப்பிக்க வேண்டும்.

- Advertisement -

தற்போது இதற்கான கால அவகாசம் முடிவடைந்து இருக்கிறது. ஒவ்வொரு அணியும் ஒன்றன்பின் மற்றொன்றாக பட்டியலை வெளியிட்டு வருகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக 13 வீரர்களை வெளியேற்றி இருக்கிறது. இதன் மூலம் அந்த அணிக்கு மீதம் 20.55 கோடி இருக்கிறது. மேலும் சர்வதேச வீரர்களை எடுக்கும் இடத்தில் மூன்று வீரர்களுக்கு இடம் காலியாக உள்ளது.

இதற்கிடையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இருந்து ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் பெஹரண்டாப், வீரர்கள் பரிமாற்றும் முறை மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எடுக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

மும்பை அணியால் விடுவிக்கப்பட்ட வீரர்கள்: 

கெய்ரோன் பொல்லார்ட், அன்மோல்பிரீத் சிங், ஆர்யன் ஜூயல், பசில் தம்பி, டேனியல் சாம்ஸ், ஃபேபியன் ஆலன், ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே, முருகன் அஷ்வின், ராகுல் புத்தி, ரிலே மெரிடித், சஞ்சய் யாதவ், டைமல் மில்ஸ்

மும்பை இந்தியன்ஸ் தக்கவைத்த வீரர்கள்:

ரோஹித் ஷர்மா (கேப்டன்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், டெவால்ட் ப்ரீவிஸ், திலக் வர்மா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரமன்தீப் சிங், டிம் டேவிட், ஜஸ்பிரித் பும்ரா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஹிருத்திக் ஷோக்கீன், குமார் கார்த்திகேய சிங், அர்ஜுன் டெண்டுல்கர், அர்ஷத் கான், ஆகாஷ் மத்வால்