12 வருடங்கள் கழித்து கிடைத்த வாய்ப்பில் விளையாடிய விதி – இந்திய வீரருக்கு நடந்த சோகம்!

0
2279
Ind vs Ban

இந்திய மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையேயான  முதலாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெறுகிறது  ஏற்கனவே ஒரு நடைபெற்ற ஒரு நாள் போட்டி தொடரை  இந்திய அணி அமைந்துள்ள நிலையில்  டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று,  ‘உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்’ போட்டியின்  இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை  தக்க வைத்துக் கொள்ள முனைப்புடன் இருக்கிறது .

இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியானது  அறிவிக்கப்பட்ட பின்னர்,  காயம் காரணமாக  சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன . இதனை அடுத்து புதிய வீரர்களை கொண்ட பட்டியலை  கடந்த சில நாட்களுக்கு முன்பாக பிசிசிஐ அறிவித்தது .

- Advertisement -

கேப்டன் ‘ரோஹித் சர்மா’வுக்கு பதிலாக  கே எல் ராகுல் அணிக்கு கேப்டனாக செயல்படுவார் என்றும்  அறிவிக்கப்பட்டது . ரோகித் சர்மாவுக்கு பதிலாக  இந்திய ஏ அணிக்கு கேப்டனாக இருந்த  அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு செய்யப்பட்டார் . மேலும் வேகப்பந்துவீச்சாளர் நௌதீப்  ஷைனி  ஜெயதேவ் உணாட்கட்  மற்றும் சுழற் பந்துவீச்சு ஆள்ரவுண்டர்   சவுரப் குமார்  ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர் .

இவர்களில்  ‘சௌராஷ்டிரா’ அணியின் கேப்டன்  ‘ஜெயதேவ் உணாட்கட் ‘ இந்திய அணிக்காக  விளையாட 12 வருடங்களுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .இவர் கடைசியாக  2010-11 ஆம் ஆண்டு  தென்னாபிரிக்க சுற்றுப்பயணம் செய்த இந்திய அணியில்  இடம் பெற்று  2010 ஆம் ஆண்டு  டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற்ற  இரண்டாவது டெஸ்ட் போட்டியில்  இந்திய அணிக்காக களம் இறங்கினார் .

அதன் பிறகு கிட்டத்தட்ட  12 வருடங்கள்  கழித்து இவருக்கு  இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில்  ஆடும் வாய்ப்பு   தற்போது கிடைத்தது . ஆனால் இதில் புதிய சிக்கலாக  பங்களாதேஷ் செல்வதற்கான ‘விசா’ இவருக்கு இன்னும் கிடைக்கவில்லை.  இதனால் இவர் முதல் டெஸ்ட் போட்டியில்  பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

- Advertisement -

12 வருடங்களுக்குப் பின் கிடைத்த வாய்ப்பு  ‘விசா’ கிடைக்காததால்  தாமதமாகியுள்ளது. ‘ஜெய் தேவ் உன்கட்’ மற்றும்  இந்திய ரசிகர்களை  வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.