தமிழ்நாடு பிரீமியர் லீகில் களமிறங்க உள்ள 12 ஐ.பி.எல் நட்சத்திர வீரர்கள்

0
221
Varun Chakravarty and Shahrukh Khan

நேற்று முன்தினம் தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடர் ஆரம்பித்துள்ளது. இந்தத் தொடரில் ஐ.பி.எல் தொடர் மற்றும் இந்திய அணியில் இடம்பெற்று விளையாடிய வீரர்கள் விளையாட உள்ளார்கள்!

இந்த முறை தினேஷ் கார்த்திக், ஆர்.அஷ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்திய அணியில் இங்கிலாந்தில் உள்ளதால், இந்தத் தொடரில் பங்கேற்கவில்லை. அதேபோல் காயத்தால் தேசிய கிரிக்கெட் அகாடமியின் கண்காணிப்பில் இருக்கும் நடராஜனும் பங்கேற்கவில்லை.

- Advertisement -

இந்தக் கட்டுரையில் ஐ.பி.எல் தொடரில் ஒரு அணிக்காகத் தேர்வாகி ஆடும் அணியில் இடம்பெற்ற, இந்தத் தொடரில் விளையாட உள்ள வீரர்களைப் பற்றித்தான் பார்க்கப் போகிறோம். ஹரி நிஷாந்த் சென்னை அணிக்காகத் தேர்வாகி இருந்தாலும், ஆடும் அணியில் இடம் பெறாததால் அவர் போன்ற வீரர்கள் யாரும் இந்தத் தொகுப்பில் இடம்பெற மாட்டார்கள்.

பாபா இந்தரஜித்

விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான இவரை, இந்த ஆண்டு கொல்கத்தா அணியால் அடிப்படை விலையான இருபது இலட்சத்திற்கு வாங்கப்பட்டார். மூன்று ஆட்டங்கள் விளையாட வாய்ப்பு கிடைக்க, அதில் இவரால் 21 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. தற்போது டி.என்.பி.எல் தொடரில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

சாய் கிஷோர்

இடக்கை சுழற்பந்து வீச்சாளரான இவரை மூன்று கோடிக்கு இந்த ஆண்டு குஜராத் அணி வாங்கி இருந்தது. ஐந்து ஆட்டங்களில் விளையாடிய இவர் ஆறு விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார். டி.என்.பி.எல் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக விளையாடுகிறார்!

- Advertisement -
சாய் சுதர்சன்

இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் இவரது அடிப்படை விலையான இருபது இலட்சத்திற்கு குஜராத் டைட்டன்ஸ் வாங்கி, ஐந்து ஆட்டங்களில் விளையாட வாய்ப்பும் அளித்தது. இவரும் ஒரு அரைசதத்தோடு சிறப்பாக விளையாடி 145 ரன்கள் அடித்தார். தற்போது டி.என்.பி.எல் தொடரில் லைகா கோவை கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

சஞ்சய் யாதவ்

இடக்கை சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான இவரை இருபது இலட்சத்திற்கு வாங்கிய மும்பை அணி ஒரு ஆட்டத்தில் விளையாட வாய்ப்பளித்தது. இவர் தற்போது நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

நாராயணன் ஜெகதீசன்

விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான இவரை இந்த ஆண்டு மீண்டும் சென்னை அணியால் இருபது இலட்சத்திற்கு வாங்கப்பட்டு இவர் இரண்டு ஆட்டங்களில் விளையாட வாய்ப்பு பெற்றார். தற்போது டி.என்.பி.எல் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

ஷாரூக்கான்

இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் அதிக விலைக்குப் போன தமிழக வீரர் ஷாரூக்கான்தான். பஞ்சாப் அணி இவரை ஒன்பது கோடிக்கு வாங்கியது. எட்டு ஆட்டங்களில் விளையாடிய இவர் 117 ரன்கள் அடித்தார். டி.என்.பி.எல் தொடரில் லைகா கோவை கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

முரளி விஜய்

இந்த வருட டி.என்.பி.எல் தொடரில் பங்கேற்கும், ஐபிஎல் மற்றும் இந்திய அணிக்காகவும் விளையாடி முரளி விஜய் பங்கேற்க இருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கிரிக்கெட்டிற்கு திரும்பும் இவர் திருச்சி ரூபி வாரியர்ஸ் அணிக்காகக் களமிறங்க உள்ளார்!

முருகன் அஷ்வின்

இந்த ஆண்டு மும்பை அணியால் 1.6 கோடிக்கு வாங்கப்பட்டு, எட்டு ஆட்டங்களில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டி.என்.பி.எல் தொடரில் சேலம் ஸ்பார்டான்ஸ் அணியில் கேப்டனாக செயல்படுகிறார்.

சந்தீப் வாரியர்

ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்த இவர், இந்த ஆண்டு ஐ.பி.எல் மெகா ஏலத்தில் விலை போகவில்லை. தற்போது டி,என்.பி.எல் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக விளையாடுகிறார்.

வருண் சக்ரவர்த்தி

இந்த முறை கொல்கத்தா அணியால் எட்டு கோடிக்குத் தக்கவைக்கப்பட்ட, இந்திய அணிக்காக விளையாடியுள்ள இவருக்கு இந்த ஆண்டு ஐ.பி.எல் சீசன் வெற்றிக்கரமாக அமையவில்லை. விளையாடிய 11 போட்டிகளில் 6 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார். இவர் டி.என்.பி.எல் தொடரில் மதுரை பாந்தர்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.

ராஜகோபால் சதிஷ்

2010 டூ 16ஆம் ஆண்டுகளில் 34 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி இருக்கும் இந்த மிதவேக ஆல்ரவுண்டர் தற்போது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

விஜய் சங்கர்

இந்த ஆண்டு ஐ.பி.எல் மெகா ஏலத்தில் 1.4 கோடிக்கு குஜராத் அணியால் வாங்கப்பட்ட இவர், நான்கு ஆட்டங்களில் விளையாடி மொத்தம் 19 ரன்கள் மட்டுமே எடுத்தார். இவர் டி.என்.பி.எல்-ல் சேலம் ஸ்பார்டான்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.