11வது முறை.. ஆஸிக்கு எதிராக இந்திய பெண்கள் அணி சரித்திர வெற்றி.. வான்கடேவில் வரலாறு!

0
530
ICT

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி சமீபத்தில் ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் மும்பையில் வைத்து இங்கிலாந்து அணியை 347 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பெற்றது.

இதற்கு அடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி விளையாடியது.

- Advertisement -

இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு முதல் இன்னிங்ஸில் தகிலா மெக்ராத் 50, பெத் மூனி 40 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலியா 219 ரன்கள் மட்டும் எடுத்து சுருண்டது. பூஜா வஸ்ட்ரெக்கர் 4, சினேகா ராணா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

இந்திய அணிக்கு முதல் இன்னிங்ஸில் ஸ்மிருதி மந்தனா 74, ஜெமிமா ரோட்டரிக்கியூஸ் 73, தீப்தி சர்மா 78, ரிக்சா கோஸ் 52, பூஜா வஸ்ட்ரேக்கர் 47 ரன்கள் எடுக்க, இந்திய அணி 126 ஓவர்களில் 406 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஆஸ்லீயா கார்டனர் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

பெரிய ரன்கள் பின்தங்கிய ஆஸ்திரேலியா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் தகிலா மெக்ராத் 73, எல்லீஸ் பெர்ரி 45 ரன்கள் எடுக்க, 261 ரன்கள் மட்டும் எடுத்து மீண்டும் சுருண்டது. இந்திய அணி தரப்பில் சினேகா ராணா 4 விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து 75 ரன்கள் என்கின்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, 2 விக்கெட்டை மட்டும் இழந்து, 18.4 ஓவர்களில் இழப்பை எட்டி, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஸ்மிருதி மந்தனா ஆட்டம் இழக்காமல் 38 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார்.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட் அணிக்கு எதிராக இதுவரை மொத்தம் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி நான்கில் தோல்வியும், ஆறு முறை ட்ராவும் செய்திருக்கிறது. ஒருமுறை கூட வெற்றி பெற்றது கிடையாது. தற்பொழுது இந்த பின்னடைவான வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணி முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்திருக்கிறது!