100வது டெஸ்டில் 100* அடித்த வார்னர்; தென்னாபிரிக்காவை புரட்டியெடுக்கும் வார்னர்-ஸ்மித் ஜோடி!

0
99

100வது டெஸ்டில் சதமடித்து புதிய வரலாறு படைத்திருக்கிறார் டேவிட் வார்னர்.

மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது தென்னாப்பிரிக்கா அணி.

- Advertisement -

இளம் வீரர் கேமரூன் கிரீன் பந்துவீச்சில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். மிச்சல் ஸ்டார்க் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். முதல் இன்னிங்சின் இறுதியில் 189 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா அணி ஆல் அவுட் ஆனது.

அதிகபட்சமாக மர்கோ ஜான்சன் 59 ரன்களும் வேரிண்ணே 52 ரன்களும் அடித்திருந்தனர். ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்க்ஸை துவங்கியது.

துவக்க வீரர் வார்னர் தனது நூறாவது டெஸ்டில் விளையாடுகிறார். இந்த மைல்கல்லை எட்டிய வெகு சில ஆஸ்திரேலியா வீரர்களுள் இவரும் ஒருவர் ஆவார். மற்றொரு துவக்க வீரர் கவாஜா ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். நட்சத்திர வீரர் லபுச்சானே 14 ரன்களுக்கு வெளியேறினார்.

- Advertisement -

அதன் பிறகு ஜோடி சேர்ந்த வார்னர் மற்றும் ஸ்மித் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதம் கடந்த பிறகு சற்று அதிரடியை வெளிப்படுத்தி வேகமாக ரன் குவிப்பில் ஈடுபட்டார் வார்னர்.

நூறாவது டெஸ்டில் சதம் அடித்து அதிலும் புதிய சாதனை படைத்தார். மறுமுனையில் விளையாடி வந்த ஸ்மித் அரைசதம் கடந்தார். இரண்டாம் நாள் ஆட்டத்தில் தேநீர் இடைவேளையின் போது, 231 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து 42 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது ஆஸ்திரேலியா அணி.

ஸ்மித் 60 ரன்களுக்கும், டேவிட் வார்னர் 135 ரன்களுக்கும் ஆட்டம் இழக்காமல் களத்தில் உள்ளனர். மூன்றாவது விக்கெட்டிற்கு இந்த ஜோடி 156 ரன்கள் சேர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.