டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் 10 வெற்றிகரமான ரன் சேஸ்கள்

0
221
Highest Test Cricket Chase

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் என்றாலே நிதானமாய் பேட் செய்வதும், ஓவர்கள் மெய்டன் ஆவது சாதாரணமானது என்றும், 200 ரன் இலக்கையே போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் வெற்றிக்கரமாகத் துரத்துவது கடினமான விசயம் என்றுதான் இரசிகர்கள் நினைப்பார்கள். பெரும்பாலான டெஸ்ட் போட்டிகள் இப்படித்தான் நகரும், முடியும்.

ஆனால் இதற்கெல்லாம் விதி விலக்காய், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் முடிவை நோக்கி நம்பிக்கையாய், தைரியமாய், அதிரடியாய் ஆடி சேஸ் செய்யப்பட்ட ஆட்டங்களும் உண்டு. இப்படி ஆடி வென்ற முதல் பத்து டெஸ்ட் ஆட்டங்களைத்தான் இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

நம்பர் 10

1978ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா வெஸ்ட் இன்டீஸ் அணிகளுக்கு இடையே நடந்த டெஸ்ட் போட்டியில், வெஸ்ட் இன்டீஸ் நிர்ணயித்த 359 ரன் இலக்கை, வெற்றிக்கரமாக விரட்டி, மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

நம்பர் 9

- Advertisement -

ஆஸ்திரேலியாவின் பெல்லரிவ் ஓவல் மைதானத்தில் பாகிஸ்தானோடு 1999 நடந்த டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் இலக்காக வைத்த 369 ரன்னை ஆறு விக்கெட் இழப்பிற்கு சேஸ் செய்து வென்றது ஆஸ்திரேலியா. சேஸிங்கில் 127 ரன்கள் அடித்த ஆஸ்திரேலியாவின் ஜஸ்டின் லாங்கர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

நம்பர் 8

2015ஆம் ஆண்டு இலங்கையின் பல்லேகலே மைதானத்தில் இலங்கை ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடந்த டெஸ்ட் போட்டியில், இலங்கை நிர்ணயித்த 377 ரன்னை, பாகிஸ்தான் அற்புணமாக விரட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 171 ரன்களை குவித்த யூனுஸ்கான் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

நம்பர் 7

2008 ஆம் ஆண்டு சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியில், 387 ரன்களை அற்புதமாக சேஸ் செய்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி. இரண்டாவது இன்னிங்ஸில் 68 பந்தில் அதிரடியாய் 83 ரன்கள் குவித்த சேவாக் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

நம்பர் 6

2017 ஆம் ஆண்டு இலங்கை ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே பிரேமதாச மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில், ஜிம்பாப்பே நிர்ணயித்த 388 ரன் இலக்கை, ஆறு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அபார வெற்றி பெற்றது இலங்கை அணி. இரு இன்னிங்ஸில் 125 ரன்களும், இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்திய அசலே குருரத்ன ஆட்டநாயகன் ஆனார்.

நம்பர் 5

2021 ஷாகூர் அகமத் செளத்ரி மைதானத்தில் பங்களாதேஷ் வெஸ்ட் இன்டீஸ் இடையே நடந்த டெஸ்ட் போட்டியில், பங்களாதேஷ் நிர்ணயித்த 395 ரன்களை, வெஸ்ட் இன்டீஸ் அணி கைய்ல் மேயர்சின் இரட்டை சதத்தோடு வெஸ்ட் அணி வெற்றிபெற்றது. அவரே ஆட்டநாயகன் விருதும் பெற்றார்.

நம்பர் 4

1976ஆம் ஆண்டு குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் வெஸ்ட் அணி நிர்ணயித்த 403 ரன் இலக்கை, இந்திய அணி நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து விரட்டி வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் 112 ரன்கள் நாட்அவுட்டாக அடித்த குண்டப்பா விஸ்வநாத் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

நம்பர் 3

1948ஆம் ஆண்டு ஹெட்டிங்லீ மைதானத்தில் இங்கிலாந்து இலக்கு வைத்த 404 ரன்களை, ஆஸ்திரேலியா அணி அணி அருமையாக சேஸ் செய்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

நம்பர் 2

2008 ஆம் ஆண்டு வான்டர்டரஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 414 ரன் இலக்கை சிறப்பாக விரட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது செளத் ஆப்பிரிக்க அணி. முதல் இன்னிங்ஸில் அரைசதம், இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து அசத்திய ஏ.பி.டிவிலியர்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

நம்பர் 1

2003ஆம் ஆண்டு ஆன்டிகுவா மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா இலக்காக வைத்த 418 ரன்களை பிரமாதமாக சேஸ் செய்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வெஸ்ட் இன்டீஸ் அணி. இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்த சந்தர்பால் ஆட்டநாயகன் விருது பெற்றார்.