“சின்ன பசங்களுக்கு தெரிஞ்சது கூட ரோஹித் சர்மாவுக்கு தெரியல!” – விளாசிய பாகிஸ்தான் வீரர்!

0
435
Rohitsharma

இந்திய அணி தற்போது பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் பங்கேற்று விளையாடி வருகிறது!

இந்த சுற்றுப்பயணத்தின் முதல் தொடரான ஒரு நாள் தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இந்தத் தொடரில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மருத்துவ காரணங்களுக்காக விலக்கப்பட்டு விக்கெட் கீப்பராக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டார்!

- Advertisement -

இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 186 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்திய அணியில் நடுவரிசையில் களமிறங்கிய கே.எல்.ராகுல் மட்டும் நிலைத்து நின்று விளையாடி அரை சதம் அடித்தார்.

இதற்கு அடுத்து விளையாடிய பங்களாதேஷ் அணி ஆரம்பத்தில் கொஞ்சம் போராடினாலும் ஆனால் போட்டியின் மத்தியில் மொத்தமாக சரிந்து 139 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இந்த நிலையில் இந்திய அணியின் வெற்றி மிக உறுதி என்ற சூழலே நிலவியது.

இம்மாதிரியான நிலையில் பத்தாவது விக்கெட் மெகதி அசன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசூர் ரகுமான் இருவரும் இணைந்து 51 ரன்கள் சேர்த்து அணியை வெற்றி பெற வைத்தனர். விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் ஒரு கேட்சை விட்டிருந்தாலும், கேப்டன் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி மீது பெரிய விமர்சனம் கிளம்பி உள்ளது.

- Advertisement -

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரியா ” இந்த ஆட்டத்தில் அப்போது வாஷிங்டன் சுந்தருக்கு ஐந்து ஓவர்கள் மீதம் இருந்தன. எந்த ஒரு அண்டர் 16 மற்றும் அண்டர் 18 இளம் வீரர்களுக்கும், முஸ்தாபிஷூர் ரகுமான் போன்ற கடைசி வரிசை இடது கை பேட்ஸ்மேனுக்கு ஒரு ஆப்ஸ் ஸ்பின்னரை வீச வைத்திருக்க வேண்டும் என்று தெரியும். இந்த விக்கெட்டில் சுந்தர் நல்ல முறையில் வீசி இருக்கவும் செய்வார். ஆனால் ரோகித் சர்மா ஏனோ அப்படி செய்ய விரும்பவில்லை ” என்று தாக்கி இருக்கிறார்!