ஆசியக்கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கையை அதிரடியாய் வீழ்த்தி இந்திய பெண்கள் அணி சாம்பியன்!

0
815
Asiacup2022

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பங்களாதேஷில் நடந்து வந்தது. இந்தத் தொடரில் இந்தியா இலங்கை பங்களாதேஷ் பாகிஸ்தான் தாய்லாந்து மலேசியா நேபாள் ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டன.

இதிலிருந்து இந்தியாதாய்லாந்து இலங்கை பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்தியா அரையிறுதியில் தாய்லாந்தை வீழ்த்தியும், இலங்கை பாகிஸ்தான் அணியை வீழ்த்தியும் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

- Advertisement -

இன்று இலங்கை இலங்கை அணிகள் ஆசிய கோப்பை இறுதி போட்டியில் மோதின. இந்த போட்டிக்கான டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் அடுத்த அரை மணி நேரத்திற்குள் அவர்களது முடிவு தவறாகிப் போனது!

இந்திய அணியின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை அணியின் விக்கெட்டுகள் மிக வேகமாக சரிய ஆரம்பித்தன. 32 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இலங்கை அணி பரிதாபமாக இழந்துவிட்டது. பின்பு கடைசி இரண்டு விக்கெட்டுகள் சேர்ந்து மொத்தம் 69 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து இந்திய அணி எளிதான இலக்கை நோக்கி களமிறங்கி விளையாடியது. ஷபாலி வர்மா மற்றும் ஜெமிமா ரோட்ரிகஸ் இருவரும் சீக்கிரத்தில் ஆட்டம் இழந்தாலும், துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அதிரடியாக 25 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 3 சிக்சருடன் 51 ரன்கள் ஆட்டமிழக்காமல் குவித்து இந்திய அணியை 8.3 ஓவர்களில் இலக்கை எட்ட வைத்தார். இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி ஆசிய சாம்பியன் ஆனது!

- Advertisement -

சில மாதங்களுக்கு முன்பு ஆண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் இரண்டாவது சுற்றோடு வெளியேறியிருந்தது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் இலங்கை அணிகள் மோத இலங்கை அணி சாம்பியன் ஆகியிருந்தது. தற்போது பெண்கள் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி சாம்பியன் ஆகியிருக்கிறது!